Home நாடு சமயப்பள்ளி தீ விபத்து: இரகசியக் கேமராவில் சிக்கிய மர்ம நபர் யார்?

சமயப்பள்ளி தீ விபத்து: இரகசியக் கேமராவில் சிக்கிய மர்ம நபர் யார்?

1467
0
SHARE
Ad

Tahfizschoolfireகோலாலம்பூர் – கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர்.

இந்நிலையில், இச்சம்பவம் ஒரு விபத்து என்ற கோணத்தில் தான் முதற்கட்ட விசாரணை துவங்கப்பட்டாலும் கூட, தற்போது இச்சம்பவத்திற்குப் பின்னால் சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

காரணம், அதிகாலை 5 மணியளவில் நடந்த இத்தீவிபத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர், அதிகாலை 3 மணியளவில் சமயப்பள்ளியின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைவது போல் இரகசியக் கேமராவில் காட்சிகள் பதிகாகியிருப்பதாக காவல்துறைத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, அந்தச் சமயப்பள்ளி மாணவர்களிடையே அண்மையில் நடந்த சண்டையும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது.

படம்: Harian Metro