Home நாடு சரவாக் மாநில ஊழல் ஒளிநாடா; 14ஆயிரம் பேர் அரச விசாரணைக்கு ஆதரவு!

சரவாக் மாநில ஊழல் ஒளிநாடா; 14ஆயிரம் பேர் அரச விசாரணைக்கு ஆதரவு!

646
0
SHARE
Ad

taibகோலாலம்பூர், மார்ச் 26- சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்த ஒளிநாடா  அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஊழல் குறித்து அரச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு ஆதரவு வழங்குமாறும் இணையத்தளம் வழி மலேசியர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஊழல் குறித்த அரச விசாரணை நடத்த வேண்டும் என்று இது வரை 14 ஆயிரம் பேர் இணையத் தளத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஆதரவு தெரிவித்திருந்த ஆதாரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரான லைனஸ் சோங் என்பவர் தலைமையிலான ஒரு குழுவினர் பிரதமர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பித்தனர். அந்த மனுவை பிரதமரின் உதவியாளர் பெற்று கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்த ஒளி நாடா லண்டனை மையமாக கொண்டு செயல்படும் மனித உரிமைக் கழகமான குளோபல் விட்னஸ் என்ற அமைப்பின் முயற்சியில் வெளியிடப்பட்ட ஒளி நாடா என்பது குறிப்பிடத்தக்கது.