Home நாடு பினாங்கு சட்டமன்றத்தைக் கலைக்க ஒரு சில நாட்கள் ஆகும்: பினாங்கு ஜசெக

பினாங்கு சட்டமன்றத்தைக் கலைக்க ஒரு சில நாட்கள் ஆகும்: பினாங்கு ஜசெக

831
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – 14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாளை சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்திருக்கும் நிலையில், பினாங்கு மாநில சட்டமன்றம் கலைவதற்கு ஒரு சில நாட்கள் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், அம்மாநில ஜசெக தலைவருமான சோ கோ இயாவ் கூறுகையில், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும், சட்டமன்றம் கலைக்கப்பது தொடர்பாக ஆளுநரிடம், முதல்வர் (லிம் குவாங் எங்) ஆலோசனை நடத்திய பின்னரே பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படும்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்றே நாங்களும் கலைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நாளை கலைக்கலாம் அல்லது ஒருநாளைக்குப் பின்னரோ அல்லது இரண்டு நாளைக்குப் பின்னரோ கலைக்கலாம்” என சோ கோன் இயாவ் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice