ஷா ஆலம் – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, ஷா ஆலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 28 வயதான இந்திய ஆடவர், சுயநினைவிழந்த நிலையில், காணப்பட்டார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போது அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியதாக சிறை நிர்வாகம் கூறியிருக்கிறது.
இது குறித்து சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மான்சோர் கூறுகையில், பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் (சொஸ்மா) 2012-ன் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், காலை 9.05 மணியளவில் ஷா ஆலம் மருத்துவமனையில் அவரைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “மரணத்திற்கான காரணம் குறித்து அறிய பிரேதப்பரிசோதனை நடத்தப்படும்” என்றும் மஸ்லான் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே, பெட்டாலிங் மாவட்ட சுகாதார அதிகாரிகள், இன்று மற்ற கைதிகள் மற்றும் அதிகாரிகளிடையே பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும் மஸ்லான் தெரிவித்திருக்கிறார்.