Home இந்தியா வனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் பட்டியலில் 39-வது இடத்தில் சல்மான் கான்!

வனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் பட்டியலில் 39-வது இடத்தில் சல்மான் கான்!

1102
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியாவில் வனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பெயர் 39-வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது.

வனவிலங்கு குற்றவியல் கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

மான் வேட்டை வழக்கில், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, ஜோத்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே பிணையில் விடுவிக்கப்பட்ட சல்மான் கான், வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டார்.

இந்நிலையில் வரும் மே 7-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

இதனிடையே, இந்திய அரசின் வனவிலங்கு குற்றவியல் கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில், வனவிலங்குகளுக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 197-ன் கீழ் தண்டனை பெற்ற 38 குற்றவாளிகளின் பெயர்கள் உள்ளன. அவற்றில் 39-வது குற்றவாளியாக சல்மான் கான் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.