Home Uncategorized கிளந்தான் மாநிலம்: பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

கிளந்தான் மாநிலம்: பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

823
0
SHARE
Ad

வியாழக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எந்தெந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்பதை அறிவித்தார்.

அதன்படி, பெர்லிஸ், பகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு ஆகிய 5 மாநிலங்களில் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்ற கட்சிகளின் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்றுவிட்ட கட்சிகள் இனி அதிகாரபூர்வமாக ஆட்சி அமைக்கலாம்.

45 சட்டமன்றங்களைக் கொண்ட கிளந்தான் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:

#TamilSchoolmychoice

பாஸ் -28

தேசிய முன்னணி – 07

பிகேஆர் – 0

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து கிளந்தான் மாநிலத்தில் பாஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கிறது.