Home நாடு மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா!

மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா!

1495
0
SHARE
Ad
மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் குலா

கோலாலம்பூர் – மனித வள அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலை (எப்-எம்) ஒலிபரப்பு மையத்திற்கு எம்.குலசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) காலை அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டார்.

வருகை மேற்கொண்ட அதே வேளையில் மின்னலின் காலைக் கதிர் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு தனது கருத்துகளை வானொலி நேயர்களுடன் குலசேகரன் பகிர்ந்து கொண்டார்.

குலாவுடன் அறிவிப்பாளர்கள் தெய்வீகன், புவனா

மின்னல் எப்.எம்-மின் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சியை விரும்பிக் கேட்கும் பல்லாயிரக்கணக்கான நேயர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்ட அவர், மின்னல் அதிகாரிகள் மற்றும் அறிவிப்பாளர்களோடும் கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

மின்னல் எப்.எம்மின் நோக்கம், உள்ளடக்கம், எதிர்கால திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கமளிக்கப்பட்டது. வானொலியில் இடம்பெறும் தேடலும் தெளிவும், செல்லமே செல்வமே, அமுதே தமிழே ஆகிய நிகழ்ச்சிகள் குறித்தும் எம்.குலசேகரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

குலாவுடன் மின்னல் பண்பலை பிரிவின் தலைவர் குமரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலைவாணி மற்றும் ஆர்டிஎம் அதிகாரிகள்

அரசாங்கத்தின் 33 வானொலிகளில், அதிகம் வருமான ஈட்டிக்கொடுக்கும் முதல்நிலை வானொலியாக மின்னல் எப்.எம் திகழ்கிறது. அதே வேளையில் சமூக ஊடகங்களான முகநூல் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய தளங்களிலும் அதிகமான நேயர்கள் கொண்ட வானொலியாகவும் மின்னல் எப்.எம் திகழ்கிறது.

“காலைக் கதிர்” நிகழ்ச்சி குறித்து….

“காலைக் கதிர் நிகழ்ச்சி தகவல்களோடு, பல்வேறு பயனான சந்திப்புகளை மக்களுக்கு வழங்குவது பாராட்டுக்குரியது. அதோடு ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தர வேண்டும்” எனவும் அமைச்சர் குலா தனது நேர்காணலின் வழி கேட்டுக் கொண்டார்.

“ஒலிச்சிற்பிகள்” புத்தகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், இந்த முயற்சி பாராட்டுக்குரிய ஒன்று எனவும் வானொலி வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்களை மறக்காது தொகுப்பாக வெளியிட்டது, சாதனைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.

இன்றைய மின்னல் எம்.எம்மின் காலைக் கதிர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன், வாக்குறுதிகளுக்கு ஏற்ப ஆவணப் பிரச்சனைகள் உட்பட்ட இந்தியர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும் என்றும் உறுதி வழங்கினார்.

தமது ஆரம்ப கால ஏழ்மையான சூழலின் காரணமாக,  ஆவணப் பிரச்சனைகளின் அவசியத்தையும் அனுபவ ரீதியாக தான் நன்றாக உணர்வதாகவும், ஒட்டுமொத்த எல்லா பிரச்சனைகளுக்கும் அதற்கு விரைந்து தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் உறுதியளித்தார்

தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றின் நலனும் தொடர்ந்து காக்கப்படும் என்றும் அவர் சொன்னார். இவை அனைத்தும் குறித்த விவரங்கள், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்டிஎம் வளாகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த அமைச்சர் குலசேகரனின் வருகை மிகவும் பயனானதாகவும்  பொருள் பொருந்தியதாகவும் அமைந்திருந்தது என மின்னில் பண்பலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.