Home நாடு “செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்

“செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்

943
0
SHARE
Ad
நினைவுகள்…செயசீலனாருடன் பி.எம்.மூர்த்தி (இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர்)

கோலாலம்பூர் – சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து நாடு முழுமையிலுமிருந்து அவருடன் பழகியவர்களும், அவருடன் பணிபுரிந்தவர்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரிகளில் ஒருவரான பி.எம்.மூர்த்தி “ஐயாவின் மறைவு அதிரச்சியான தகவல்தான்! இருப்பினும், இயற்கையின் தீர்ப்புக்கு எதிராக யார்தான் நிற்க முடியும்? ஐயா அவர்கள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்! “தோன்றின் புகழோடு தோன்றுக” என்று ஐயன் வள்ளுவனார் குறிப்பிட்ட புகழை எய்தி இப்பூவுலகை விட்டுப் போயிருக்கிறார்கள்” என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

“மலையகத் தமிழ்க்கூறு நல்லுகில் ஐயாவின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்! தமிழுக்கும் குறிப்பாகத் தனித் தமிழ் இயக்கத்திற்கும் தூயத் தமிழ்ச் சொல்லாக்கத்திற்கும் ஐயா வழங்கிச் சென்றிருக்கும் பங்கு அளப்பரியது! ஐயா அவர்களை என்றென்றும் நன்றியோடு எண்ணிப் பார்ப்போம்! ஐயாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கு் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்” என்றும் மூர்த்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.