Home நாடு நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!

நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!

2289
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம் அது குறித்த விவரங்களையும் விரிவாக  வெளியிட்டுள்ளது. அதன்படி மஇகாவுக்கு நஜிப் தலைமைத்துவத்தின்போது, 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு 20,550,000 ரிங்கிட் நிதி பல தவணைகளாக பிரித்து வழங்கப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தேதி வாரியாக மலேசியாகினி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதே வேளையில் தேசிய முன்னணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ஐபிஎப் கட்சிக்கு 1 மில்லியன் ரிங்கிட் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் கீழ்க்காணும் தேதிகளில் ஐபிஎப் கட்டிட நிதிக்கென வழங்கப்பட்டிருக்கிறது:

1. 5 இலட்சம் ரிங்கிட் -16 அக்டோபர் 2012

#TamilSchoolmychoice

2. 5 இலட்சம் ரிங்கிட் – 5 ஏப்ரல் 2013

மேற்கண்டபடி இரு தடவைகளாக நஜிப் மூலமாக ஐபிஎப் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட்டாகும். இந்தப் பணம் ஐபிஎப் கட்டிட நிதிக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.