Home நாடு கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர் விலக்கப்படுவார்கள் – அன்வார்

கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர் விலக்கப்படுவார்கள் – அன்வார்

942
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஊழல் புகார்களின் அடிப்படையில் கெடாவில் கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

அலோர்ஸ்டாரில் பிகேஆர் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் அவருடன் சேர்த்து இன்னொருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் உட்கட்சித் தேர்தல் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிகேஆர் தேர்தல் ஒருங்கிணைப்பாளருக்குப் பதிலாக இன்னொருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அந்தக் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் தேர்தலில் வேட்பாளராக ஒருவர் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக 20 ஆயிரம் ரிங்கிட் பணம் கோரினார் என்பதற்காக 48 வயது கொண்ட அந்த பிகேஆர் கட்சி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அலோர்ஸ்டாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 46 வயதுடைய இன்னொருவரும் பெண்டாங்கில் கைது செய்யப்பட்டார்.

அவர்களிடத்தில் 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.