Home நாடு இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி: இப்போதே விலக வேண்டும்

இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி: இப்போதே விலக வேண்டும்

997
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து இப்போதே விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் அவர் தாமதிக்கக் கூடாது என்றும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவுறுத்தியுள்ளார்.

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்லீ அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியும் அமைச்சரவையும் ஏற்கனவே தெளிவாக முடிவு செய்துவிட்டதாக மொகிதின் தெரிவித்தார்.

“அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமே அவ்வளவு சீக்கிரமாக அந்தப் பதவியில் இருந்து விலகுவது நல்லது. அவருக்கு இதுகுறித்துத் தெரியும் என நம்புகிறேன்” என்றும் மொகிதின் யாசின் கூறினார்.

#TamilSchoolmychoice

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு மாணவர்கள் தரப்பிலும், பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் நிகழ்ந்தன.
அவரது அலுவலகத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அவர் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கப் போவதில்லை என அறிவித்திருந்தார்.