Home நாடு அஸ்வாண்டினுக்கு நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவல்!

அஸ்வாண்டினுக்கு நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவல்!

697
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசிய அமைப்பின் தலைவர், அஸ்வாண்டின் ஹம்சா இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சர்ச்சைக்குரிய உரையின் காரணமாக நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்படுவார்.

இன்றுகிள்ளான்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் முகமட் இம்ரான் தம்ரின், அஸ்வாண்டின் தடுப்புக் காவலை உறுதிச் செய்தார்.

சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யாவிட்டால், கிள்ளான் காவல் நிலையத்தை தாக்க அச்சுறுத்தியக் காரணத்திற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவர் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் தடுத்து வைக்கப்படுவார் என்றும், அஸ்வாண்டின் மீது முழுமையான விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்ததாக இம்ரான் கூறினார்.

குற்றவியல் சட்டம் 506-இன் கீழ், காவல் துறையை அச்சுறுத்தியக் குற்றத்திற்காகவும், ஒருவரை அவமதித்ததற்காகவும் அஸ்வாண்டின் விசாரிக்கப்படுவார் எனக் கூறினார்.