Home உலகம் அமெரிக்கா: அதிகம் போற்றப்படும் பெண்கள் வரிசையில் மிச்சல் ஒபாமா முதலிடம்!

அமெரிக்கா: அதிகம் போற்றப்படும் பெண்கள் வரிசையில் மிச்சல் ஒபாமா முதலிடம்!

836
0
SHARE
Ad

அமெரிக்கா: அமெரிக்காவில் அதிகம் போற்றப்படும் பெண்மணி யார் என எடுக்கப்படும் வருடாந்திர வாக்கெடுப்பில், முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்சல் ஒபாமா அமெரிக்காவில் அதிகம் போற்றப்படும் பெண் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். கடந்த 17 வருடங்களாக இந்த அங்கீகாரத்தை தம் வசம் வைத்திருந்த ஹிலாரி கிளிண்டன் இம்முறை மிச்சில் ஒபாமாவிடம் அதனை இழந்து விட்டார்.

மேலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா 11-வது முறையாக, அதிகம் போற்றப்படும் ஆண்கள் வரிசையில் முதல் இடத்திலேயே இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் இருக்கிறார்.

1946-ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

டிசம்பர் 3 மற்றும் 12-க்கு இடையில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், 15 விழுக்காடு அமெரிக்கர்கள், மிச்சல் ஒபாமா தங்களை அதிகம் கவர்ந்த பெண்ணாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.