Home நாடு செமினி: 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும்!- தேர்தல் ஆணையம்

செமினி: 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும்!- தேர்தல் ஆணையம்

697
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் 70 விழுக்காடு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்துவார்கள் என தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்காக 12 அமைப்புகளிலிருந்து 134 பார்வையாளர்கள் செமினி இடைத் தேர்தலை கண்காகிக்க உள்ளதாக அது தெரிவித்தது.

இதற்கிடையே, இன்று சனிக்கிழமை நடைபெற்ற, வேட்புமனு தாக்கல் எவ்வித பிரச்சனைகளும் இன்றி நடந்ததாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது. நம்பிக்கைக் கூட்டணி அரசைப் பிரதிநிதித்து அய்மான் சாய்னாலி, தேசிய முன்னணி சார்பில் சாகாரியா ஹனாபி, பிஎஸ்எம் கட்சி சார்பாக நிக் அசிஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளரான குவான் சி ஹெங், இந்தத் தேர்தலில் களம் இறங்க உள்ளனர்.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நூர் (57 வயதுமாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, வருகிற மார்ச் 2-ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.