Home நாடு “தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு நான் வருவேன், மஇகா-மசீச வர வேண்டும்!”- நஸ்ரி

“தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு நான் வருவேன், மஇகா-மசீச வர வேண்டும்!”- நஸ்ரி

919
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன. ஆயினும், அக்கூட்டத்திற்கு தாம் கண்டிப்பாக வர இருப்பதாக நஸ்ரி தெரிவித்துள்ளார்.

நஸ்ரி அக்கூட்டத்தில் பங்கெடுத்தால், சட்டரீதியான பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும், அவ்வாறான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கே நஸ்ரியின் பங்கேற்பை எதிர்ப்பதாக அவ்விரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை, தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு, நஸ்ரி அஜிஸ் கலந்து கொண்டால், மஇகா மற்றும் மசீச அக்கூட்டத்தில் இடம்பெறாது என அறிக்கையின் மூலம் தெரிவித்தன. தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக, நஸ்ரி அஜிஸ்சின் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், நஸ்ரியின் நியமனம் குறித்து ஒரு போதும் உச்சமன்றக் குழுவில் கலந்தாலோசிக்கவில்லை என்றும், அது குறித்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை எனவும் அவை தெரிவித்தன.