Home நாடு வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழிகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு!

வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழிகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு!

834
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வேலைக்கு செல்லும் வழிகளிலும், வேலை முடிந்து வீடு திரும்பும் வழிகளிலும் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளதாக பெர்கெசோ, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் (என்ஐஒஎஸ்எச்) மற்றும் மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (மிரோஸ்) தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 666 பேர் வேலைக்குச் செல்லும் வழிகளிலும், வீடு திரும்பும் வழிகளிலும் விபத்தில் சிக்கி உயிர் இழந்திருப்பதாக அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த 2015-ஆம் சுமார் 28,579 விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளையில், 2016-ஆம் அதன் எண்ணிக்கை 2,735-ஆக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு 33,319 விபத்துகள் நிகழ்ந்துள்ள வேளையில், 2018-ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை உயர்ந்து 35,195-ஆக பதிவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வாகனங்களை செலுத்தும் பொழுது கைபேசியை பயன்படுத்துவது, இந்த விபத்துகளுக்கான முக்கியக் காரணமாக அமைகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தலைக்கவசம் அணிவிக்காதது, ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்துவது, வேகமாக வாகனத்தை செலுத்துவது, முறையான வாகன பராமரிப்பு இல்லாமை மற்றும் மயக்கம் ஏற்பட்டும் இம்மாதிரியான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.