போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் கூறுகையில், இஸ்லாம் அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடுவதாகவும், அது அமைதியை விரும்பும் மதம் என்றும் கூறினார்.
“இலங்கையில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள டாயிஸ் தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இவர்களின் வன்முறை செயல்கள் குர்ஆனில் உள்ள போதனைகளுக்கு எதிரானவை” என்று அன்வார் குறிப்பிட்டார்.
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 359 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நியூசிலாந்தில் கிரிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் போது உலக மக்கள் ஒன்றுகூடி எப்படி அவர்களின் அன்பை வெளிப்படுத்தினார்களோ, அவ்வாறு மலேசியர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் அன்பு மற்றும் ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.