Home நாடு சண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு!

சண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு!

678
0
SHARE
Ad

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கையில், மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 31 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7.30 மணியளவில் வாக்கு மையங்கள் திறக்கப்பட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

வானிலை சீராக இருக்கும் நிலையில்  நிறைய பேர் வாக்களிக்க வெளியேறுவார்கள் என தாம் நம்புவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி எந்த ஒரு விரும்பத் தகாத சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிரச்சாரக் காலத்தில் சுமார் 12 புகார்கள் இதுவரையிலும் பெறப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் சிறு சிறு விவகரங்களை உட்படுத்தியது எனவும் அசார் தெரிவித்தார்.

சண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில்ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.

இவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.  முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லாசியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவு இன்று இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.