Home நாடு விடாமுயற்சி, நம்பிக்கை, ஒழுக்கம் போன்றவை வெற்றியின் அறிகுறி!- பிரதமர்

விடாமுயற்சி, நம்பிக்கை, ஒழுக்கம் போன்றவை வெற்றியின் அறிகுறி!- பிரதமர்

758
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் போன்றவை ஆரம்பத்திலிருந்தே மாணவர்கள் மத்தியில் ஊன்றிருக்க வேண்டிய அவசியத்தை பிரதமர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.  இவ்வாறான, பழக்க முறைகள் நாளடைவில் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கலாச்சாரத்தை மேன்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

இம்மூன்று அம்சங்களையும் மலேசியர்கள் நன்கு பற்றிக் கொண்டால் மலேசியர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க இயலும் என அவர் கூறினார்.

ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்ற சமூதாயமாக உருவாக்குவதில் தங்களது உன்னத நேரத்தையும், தியாகத்தையும் முன்னிருத்துவதால் அவர்கள் கௌரவமான மதிப்பிடப்படுகிறார்கள். உலகளாவிய ரீதியிலான கொள்கைகளுக்கு நம் மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முழு பங்கினை ஆற்ற வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதன் விளைவாக ஏற்படும் மாற்றங்களை மாணவர்களுக்கு நல்லமுறையில் வழங்க ஆசிரியர்கள தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.