Home இந்தியா இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 287; பாஜக கூட்டணி 342;...

இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 287; பாஜக கூட்டணி 342; காங்கிரஸ் (தனித்து): 54; காங்கிரஸ் கூட்டணி: 90; மற்றவை: 110

750
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் மதியம் 1.20 மணி நிலவரம்) 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலில் இன்று 542 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய நாடாளுமன்றம் மொத்தம் 545 தொகுதிகளைக் கொண்டதாகும். இதில் இரண்டு தொகுதிகளுக்கு ஆங்கிலோ இந்தியர்கள் தேர்தலின்றி இந்திய அதிபரால் நேரடியாக நியமிக்கப்படுவர்.

எஞ்சிய 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த முறை தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்பட்டதால், மொத்தம் 542 தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் இந்திய நாட்டை ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும் நிலையில், ஆரம்பக்கட்ட தபால் வாக்குகள் கணக்கெடுப்பு முடிந்து தற்போது இயந்திர வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.  தபால் வாக்குகள் என்பது பெரும்பாலும் அரசு அதிகாரிகளின் வாக்குகள் எனக் கொள்ளப்படுவதால், இவர்களின் வாக்குகள் நடப்பு அரசுக்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை கட்சிகள் முன்னிலை வகிக்கும் அடிப்படையில் வெளியிடப்படுவதாகும். அதிகாரத்துவ இறுதி முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியிடப்படும்.