Home நாடு பூப்பந்து துறையிலிருந்து ஓய்வு பெற்றார் லீ சோங் வெய்!

பூப்பந்து துறையிலிருந்து ஓய்வு பெற்றார் லீ சோங் வெய்!

1142
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி பூப்பந்து வீரரான லீ சோங் வெய் இன்று வியாழக்கிழமை தாம் பூப்பந்து துறையிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறியப்பட்டதன் அடுத்து அவர் அடிக்கடி பரிசோதனைக்காக தைவானுக்கு சென்று வர வேண்டியுள்ளதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

தன் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட விரும்புவதாக சோங் வெய் மலேசியா பூப்பந்து சங்கத்திடம் தெரிவித்து விட்டதாகக் கூறினார்.

மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்ற சோங் வெய் இது குறித்து தம் மனைவியிடமும் மருத்துவரிடமும் கலந்து பேசி விட்டதாகக் கூறினார். தற்போதைக்கு அவருக்கு போதுமான ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அவர் விலகிக் கொள்வதாகக் கூறினார்.

“இம்முடிவானது எனக்கு வருத்தத்தை அளிப்பதாக இருந்தாலும், எனது உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளேன்” என்று சோங் வெய் கூறினார்.

கடந்த 19 வருடங்களாக அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு, பிஏஎம், தேசிய விளையாட்டு துறை மற்றும் அவரது பயிற்சியாளர்களுக்கு தனது நன்றியை சோங் வெய் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவரது மனைவி, குடும்பம் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக் சோங் வெய் போன்ற விளையாட்டாளரை இனி தேடி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தாம் சோங் வெயின் விளையாட்டை சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததாகவும், இனம், மதங்களுக்கு அப்பாற்பட்டு அவர் அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு வீரராகத் திகழ்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

வருகிற 2020-ஆம் ஆண்டில் தோக்கியோவில் நடைபெற இருக்கு ஒலிம்பிக் போட்டியில் செப் டி மிஷனாக (Chef de Mission) சோங் வெயை நியமிப்பதாக அமைச்சர் கூறினார்.