கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை இணைத்து வெளியிடப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி குறித்து மலேசிய தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) தீவிரமாக ஆரய்ந்து வருவதாகவும், அதன் முதன்மை பணியாக இது இருக்கும் எனவும், அதன் தலைவர் அல்-இஷ்சால் இஷாக் கூறினார்.
இணையக் குற்றச்செயல்கள் குழுவுடன் இணைந்து காவல் துறையின் வர்த்தகரீதியான இணைய குற்றச்செயல் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியே இந்த காணொளியை பரவச் செய்தவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
சாந்துபோங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரான ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் அந்த காணொளியில் இருப்பது தாம்தான் என்று ஒப்புக் கொண்டு காணொளி ஒன்றினை பதிவிட்டதற்கு அமைச்சர் அஸ்மின் அலி அது அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரசியல் சதி எனக் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்மின் மறுத்த அடுத்த சில மணி நேரங்களில் கடந்த புதன்கிழமை, மற்றொரு காணொளி வாட்சாப் மூலமாக வெளியிடப்பட்டது.