Home நாடு காணொளி உண்மையானதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவுகள் பெறவில்லை!- காவல் துறை

காணொளி உண்மையானதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவுகள் பெறவில்லை!- காவல் துறை

612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணோளி உண்மையானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான விசாரணையின் முடிவுகளுக்கு இன்னும் காத்திருப்பதாக காவல் துறை துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் கூறினார்.

இது ஒரு விரிவான விசாரணையாக இருப்பதால் விசாரணைகளை எப்போது முடிக்க வேண்டும் என்ற கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மஸ்லான் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14-ஆம் தேதி), ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக பிகேஆர் கட்சி உறுப்பினர் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.