Home நாடு மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளார்!

மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளார்!

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 40 ஊழல்களை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய குற்றச்சாட்டுகள் மூலமாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் 87-ஆக உயர்ந்துள்ளது.

அவர் ஏற்கனவே 47  குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை புதன்கிழமை (ஜூன் 26) கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் சாஹிட் மீது மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன. அதனை அடுத்து வருகிற வியாழக்கிழமை மேலும் கூடுதல் 33  குற்றச்சாட்டுகளை ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் எதிர்கொள்வார் என்று அறியப்படுகிறது.

அவர் இலஞ்சம் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் பிரிவு () (பி) கீழ் 33 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ள ஏழு குற்றச்சாட்டுகள் ஊழல் தொடர்பான தண்டனைச் சட்டம் பிரிவு 165-இன் கீழ் இடம்பெற்றுள்ளன.