Home நாடு “மலாய்க்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பெர்சாத்து கட்சிதான்!”- அனுவார் மூசா

“மலாய்க்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பெர்சாத்து கட்சிதான்!”- அனுவார் மூசா

754
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திருநங்கைகள், ஒருபால் உறவுகள் கலாச்சாரங்கள் மற்றும் தாராளவாத கருத்துகளுக்கு முழுக்கவும் பெர்சாத்து கட்சியே காரணம் என்று அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.

மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க அனைத்து மலாய்க்காரர்களும் ஒற்றுமையாக ஒரு கட்சியின் கீழ் ஒன்று சேர வேண்டும் என்ற அழைப்பினை மக்கள் கருதப் போவதில்லை என்று அவர் கூறினார்.

தலைவர்களுக்கிடையில் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக மலாய்க்காரர்களை சிறுமைப் படுத்திப் பார்க்கும் பெர்சாத்துவின் நடவடிக்கையால், மலாய்க்காரர்கள் அக்கட்சியை தொடர்ந்து நிராகரிப்பார்கள்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கட்சியின் தலைமை பொறுப்பிலிருக்கும் டாக்டர் மகாதீர் முகமட், மலாய்க்காரர்களின் அதிகாரத்தையும், அவர்களின் உரிமைகளையும் ஜசெகாவுக்கு விட்டுக் கொடுத்து, அரசாங்கத்தில் உள்ள முக்கியப் பதவிகளை அவர்களிடமே ஒப்படைத்ததுள்ளதும் இதற்கான காரணமாக அமைகிறது என்று அவர் கூறினார்.

பெர்சாத்து கட்சியினை மலாய்க்காரர்களின் பெரும்பான்மை அரசியல் சக்தியாக வலுப்படுத்த அம்னோ உள்ளிட்ட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் ஒன்று சேருமாறு பிரதமர் விடுத்த அழைப்பிற்கு அனுவார் இவ்வாறு கருத்துரைத்தார்.

பல்வேறு மலாய் அரசியல் கட்சிகளின் இருப்பு வருகிற தேர்தல்களில் பெர்சாத்து வெற்றிபெறும் வாய்ப்பினை குறைக்கும் என்று மகாதீர் கூறினார்.