கோலாலம்பூர்: கல்விக் கடன்களால் கருப்பு பட்டியலிடப்பட்ட மாணவர்கள் இப்போது தங்கள் சொந்த வீட்டை வாங்க முடியும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சர் சுரைடா காமாருடின் தெரிவித்தார். இனி சம்பந்தப்பட்டவர்களை மத்திய கடன் குறிப்பு தகவல் அமைப்பு (சிசிஆர்ஐஎஸ்) கீழ் ஒரு வீட்டை வாங்குவதற்கு தடுப்புப்பட்டியலில் சேர்க்க மாட்டார்கள்.
“இது வீடுகளை வாங்கும் நோக்கத்திற்காக மட்டுமே. அவர்களால் கார்களையோ அல்லது வேறு எதனையோ வாங்க முடியாது”என்றுசுரைடா கூறினார்.
எந்தவொரு வீட்டுக் கடனையும் பெறுவதற்கு அவர்கள் தகுதி பெறலாம் என்று அவர் கூறினார்.
தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (பிடிபிடிஎன்) மூலம் கல்வி அமைச்சிலிருந்து விலக்கு அளிக்க தனது அமைச்சு ஒப்புதல் பெற்றதாக சுரைடா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட இருக்கும் இளைஞர் வீட்டுக் கொள்கையில் சேர்க்கப்படும் என்று சுரைடா கூறினார்.