Home நாடு மெட்ரிகுலேஷன்: “இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன?”- டத்தோ டி.மோகன்

மெட்ரிகுலேஷன்: “இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன?”- டத்தோ டி.மோகன்

979
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்திற்காக இந்திய மாணவர்களின் சேர்க்கையில் இறக்கம் கண்டுள்ளதை குறித்து மஇகா கட்சியின் செனட்டர் டத்தோ டி. மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு 1,804 ஆக இருந்த இந்திய மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,212 ஆக குறைவதற்கான காரணத்தை அவர் கோரியுள்ளார்.

“2019-ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? அல்லது இது அமைச்சரவை உத்தரவாக இருந்ததா? யார் முடிவு எடுத்தார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

இந்த எண்ணிக்கை வேண்டுமென்றே குறைக்கப்பட்டிருந்தால், அது பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் கீழ் இனவெறி வழக்கு உள்ளதை உறுதிபடுத்துவதாக மோகன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2018-இல் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,804 ஆகவும், இந்த ஆண்டுக்கு 1,212 ஆகவும் உள்ளது என்று கல்விஅமைச்சு மேலவையில் தெரிவித்திருந்தது.