Home அரசியல் கொட்டும் மழையிலும் அம்பிகா, கிட் சியாங் உரை கேட்க சிரம்பானில் 10,000 பேர் கூடினர்.

கொட்டும் மழையிலும் அம்பிகா, கிட் சியாங் உரை கேட்க சிரம்பானில் 10,000 பேர் கூடினர்.

659
0
SHARE
Ad

Ambiga-Sliderசிரம்பான், ஏப்ரல் 11 –  இங்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த ‘மாறுவோம், மாற்றுவோம்’ பேரணியின் போது, பெர்சே இணைத்தலைவர் அம்பிகா சீனிவாசன், ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ ஆகியோரின் உரையைக்கேட்க சிரம்பானே அதிரும் வகையில் 10,000 பேருக்கு மேல் திரண்டனர்.

மக்கள் எதிர்பார்த்தபடியே அவர்களின் பேச்சிலும் அனல் பறந்தது.

டத்தோ அம்பிகா பேசுகையில் பொதுமக்களிடம் விழிப்பு நிலையை ஏற்படுத்தும் வகையில் ‘பெர்சே ஜோம் 100’ எனும் பிரச்சாரக்குழுவை தொடங்கியுள்ளதாகவும், இத்திட்டம் மூலம் 100 விழுக்காடு வாக்குகள் பதிவாவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

13வது பொதுத்தேர்தலை கண்காணிக்க இத்திட்டம் மூலம் பொதுமக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அம்பிகா, இம்முறை எல்லா சூழ்ச்சிகளையும் முறியடித்து மாற்றத்தைக் கொண்டு வர மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். இந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி வந்திருந்த அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

மக்கள் கூட்டணி பெர்சே அமைப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாலேயே பெர்சேயும் மக்கள் கூட்டணிக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயக செயல்கட்சியின் தேர்தல் நிதிக்கு உதவும் வகையில் பொதுமக்கள் 46 ஆயிரத்து 800 வெள்ளியை நன்கொடையாக இந்த நிகழ்வில் வழங்கினர்.

இந்நிகழ்வில் பங்குகொண்ட இந்திய பொது இயக்கங்களின் தலைவர்கள், நேர்மையான தேர்தலுக்காகப் போராடிவரும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவுக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.