Home One Line P1 சபா தேர்தல்: தேமு வேட்பாளர் பட்டியல் வெளியானது

சபா தேர்தல்: தேமு வேட்பாளர் பட்டியல் வெளியானது

583
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநில தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் சபா மாநிலத் தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

73 தொகுதிகளில் அம்னோ 31 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. முன்கூட்டியே, குறிப்பிட்டது போல, முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமானுக்கு எந்தவொரு தொகுதியும் வழங்கப்படவில்லை.

இது குறித்து வினவிய போது, மூசா அமான் தம்மிடம் இட ஒதுக்கீடு குறித்து பேசவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மூசா, கடந்த தேர்தல்களில் சுங்கை சிபுகா தொகுதியில் அம்னோ, தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்டார்.

கடந்த ஜூலையில் அவருக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி, வாரிசானிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற மூசா முயன்றார். ஆயினும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

முன்னாள் முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநரிடம் முன்மொழிந்ததை அடுத்து மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பாங்கி – அக்ராம் இஸ்மாயில்
பெங்கோகா – ஹாருண் துராபி
பிதாஸ் – சூபியான் அப்துல் கரீம்
தெம்பாசுக் – முகமட் அர்சாத் பிஸ்டாரி
உசுகான் – டத்தோஸ்ரீ சல்லே சைட் கெருவாக்
பந்தாய் டாலித் – ஜாஸ்னி டாயா
காராம்புனாய் – டத்தோ யாகுப் கான்
டாராவ் – டத்தோ ஜுமாத் இட்ரிஸ்
தஞ்சோங் ஆரு – முகமட் ரெடுவான் அக்லீ
தஞ்சோங் கெராமாட் – ஷாஹெல்மி யஹ்யா
பந்தாய் மானிஸ் – முகமட் தாமீன்
போங்காவான் – அக் லஹாப் அக் பக்கர்
லுமாடான் – டத்தோ கமார்லின் ஓம்பி
சிண்டுமின் – சானி மியாசின்
கெமாபோங் – டத்தோ ரைம் உங்கி
தெலுபிட் – அப்துல் வஹாப் அப்துல் கானி
சுகுத் – ஜேம்ஸ் ராதிப்
கும்- கும் – சுஹைமி நாசி ர்
சுங்கை மணிலா – மோக்ரான் இங்காட்
சுங்கை சிபுகா – முகமட் ஹம்சான் அவாங் சுப்பியான்
செகோங் – ஹஸுலிசா முகமட் டானி
குவாமுத் – ஜுஹாரி ஜனான்
லாமாக் – டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின்
சுகாவ் – டத்தோ ஜாப்ரி அரிபின்
துங்கு- மொமென்
குனாக் – ஹாலிட் ஹருண்
சுலாபயான் – அப்துல் மானான் இன்டானான்
பாலுங் – ஹாமில்ட்
குக்குசான் – சாயா சுலைமான்
தஞ்சோ பத்து – ஆண்டி முகமட் சுராடி பாண்டி
பாகினாதான் – ஜுனைடி சஹாத்