Home One Line P1 கிரிக் நாடாளுமன்றம் போட்டியில்லாமல் அம்னோவிற்கே வழங்கப்பட வேண்டும்!- குவான் எங்

கிரிக் நாடாளுமன்றம் போட்டியில்லாமல் அம்னோவிற்கே வழங்கப்பட வேண்டும்!- குவான் எங்

494
0
SHARE
Ad

கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மானின் மரணத்தைத் தொடர்ந்து, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அம்னோவை எதிர்க்கும் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

இது அம்னோ கட்சியை எதிர்க்காமல் அத்தொகுதியை அவர்களே தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.

நாடு தற்போது தேர்தலுடன் தொடர்புடைய அபாயங்களை பரிசீலித்து வருவதாக குவான் எங் கூறினார்.

#TamilSchoolmychoice

“பொது பாதுகாப்புக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் . சபா தேர்தல் நடத்த நிர்பந்திக்கப்பட்ட பின்னர் கொவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிகரித்ததை பொதுமக்கள் மறக்க முடியாது.

“கொவிட் -19 தொற்றால் ஏற்படும் ஆபத்து மற்றும் அபாயங்கள் முடியும் வரை அரசியல் தேர்தலுக்கு இடைநிறுத்தம் இருக்க வேண்டும்.”

ஹிஸ்புல்லாவின் குடும்பத்தினருக்கும் லிம் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் அரசியல் பிளவு இருந்தபோதிலும், அவரது இரண்டு பதவிக் காலங்களில் அவர் செய்த பங்களிப்புகளை குவான் எங் அங்கீகரித்தார்.

ஹஸ்புல்லா நேற்று திங்கட்கிழமை மாரடைப்பால் காலமானர். தேசிய வீடமைப்புக் கழகத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

2018 பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் கிரிக் தொகுதியில் போட்டியிட்ட ஹாஸ்புல்லா பாஸ் வேட்பாளரைவிட 5,528 பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த பொதுத் தேர்தல் முடிவடைந்து இன்னும் 3 ஆண்டுகள் முழுமை பெறாததால் கிரிக் தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.