Home One Line P1 அனுவார் மூசாவிடம், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு

அனுவார் மூசாவிடம், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு

885
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜசெக சட்டமன்ற உறுப்பினர் தான் கோக் வாய் அனுவார் மூசாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று பிற்பகல் தனது அலுவலகத்தில் அவரைச் சந்தித்ததாகவும், அங்கு அவர் மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்து தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற்றதாகவும் அனுவார் மூசா டுவிட்டர் பதிவில் கூறினார்.

நவம்பர் 18-ஆம் தேதி, தான் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது செய்தார்.

#TamilSchoolmychoice

கடந்த எட்டு மாதங்களில் கோலாலம்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான 42 சொத்துக்களை விற்றதாகக் கூறி தான் கொக் வாய் அனுவார் மூசா மீது குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து தான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்திருந்தார்.

தானின் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்றும், அதனால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக அனுவார் கூறியிருந்தார்.

செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்ப வாய்ப்பு கிடைத்தும், அதற்கு பதிலாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பை தேர்வு செய்ததாக அனுவார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டது என்பதால், தான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது வழக்கறிஞர்களுக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக அனுவார் கூறியிருந்தார்.

மார்ச் மாதத்தில் அமைச்சராக ஆனதிலிருந்து, டிபிகேஎல்லின் எந்தவொரு சொத்தையும் விற்க ஒப்புதல் கோரவில்லை என்று அனுவார் கூறினார்.

மன்னிப்பு குறித்து கருத்து தெரிவித்த தான், இது சரியான செயல் என்று கூறினார்.

“உண்மையில் தவறான தகவல்களின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்தேன். ஆகவே, நான் பிழையைச் செய்தேன் என்பதை அறிந்தேன். ஒரு பண்புள்ள மனிதனாக மன்னிப்பு கேட்பது எனக்கு சரியானது என்று தோன்றுகிறது, ” என்று அவர் மேலும் கூறினார்.