Home One Line P1 பள்ளி படிப்பிலிருந்து விடுபடாமலிருக்க 1,000 மாணவர்களுக்கு மஸ்லீ மாலிக் உதவி

பள்ளி படிப்பிலிருந்து விடுபடாமலிருக்க 1,000 மாணவர்களுக்கு மஸ்லீ மாலிக் உதவி

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று காலத்தில் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறுவதிலிருந்து காப்பாற்ற பொது நிதியுதவி திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தொடங்கி உள்ளார்.

‘உந்தோக் மலேசியா’ எனும் அவரது கல்வி இயக்கத்தின்  மூலமாக ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவருக்கும் குறைந்தபட்சம் 250 ரிங்கிட் தேவைப்படுகிறது. முதல் கட்டத்தில் குறைந்தது 1,000 மாணவர்களுக்கு உதவ அவர் திட்டமிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு படிக்க, எழுத மற்றும் கணக்கிடக் கற்பிப்பதற்காக தன்னார்வலர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வீட்டின் 10 கி.மீ சுற்றளவில் வசிக்கும் இரண்டு மாணவர்களை கவனித்துக்கொள்வார்கள்.

#TamilSchoolmychoice

“நம்மிடையே இன்னும் படிக்க, எழுத மற்றும் கணக்கிட முடியாத மாணவர்கள் உள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். எனவே, நாம் உதவ உள்ளோம், ” என்று அவர் நேற்று தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“சராசரியாக, மாணவர்கள் 185 பள்ளி நாட்களை இழந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், அவர்கள் எந்த ஒரு நபரின் தலையீடும் இல்லாமல் கைவிடப்பட்டவர்களாகவே இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 31 நிலவரப்படி, முதன்மை மட்டத்தில் 2,741,837 மாணவர்களும், இரண்டாம் நிலை அளவில் 2,037,433 மாணவர்களும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.