Home One Line P1 பிபிஆர் நிதி உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது

பிபிஆர் நிதி உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது

517
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொத்தம் 8.45 மில்லியன் மக்கள் பந்துவான் பிரிஹாதின் ரக்யாட் (பிபிஆர்) உதவியை இன்று பெறுகின்றனர்.

முதல் கட்டமாக 1.93 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

4.4 மில்லியன் குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு 300 ரிங்கிட் வழங்கப்படும் நிலையில்,  4.05 மில்லியன் திருமணமாகாதவர்களுக்கு 150 ரிங்கிட் வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

பணம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 25) தொடங்கி வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு பேங்க் சிம்பானான் நேஷனல் (பிஎஸ்என்) கிளைகளில் பணத்தைப் பெறலாம்.

“வங்கி கணக்கு இல்லாத சபா மற்றும் சரவாக் ஆகியவற்றில் உதவி பெறுபவர்கள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 1 வரை பணம் பெறத் தொடங்குவார்கள்,” என்று தெங்கு ஜாப்ருல் கூறினார்.