Home நாடு சிலாங்கூர்: அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் நிதி உதவி

சிலாங்கூர்: அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் நிதி உதவி

478
0
SHARE
Ad

ஷா ஆலாம்: நோன்பு பெருநாளை அடுத்து மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் சிறப்பு நிதி உதவியை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார்.

22.67 மில்லியன் ரிங்கிட் தொகையான இந்த உதவித் தொகை, மே 19 அன்று செலுத்தப்படும்.

இது மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் நிர்வாகிகள் மற்றும் மாநில அரசு சேவையின் உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமிருடின் கூறினார்.

#TamilSchoolmychoice

கிராம சமூக முகாமைத்துவ மன்றங்களின் தலைவர்கள், புதிய கிராமங்களின் தொடர்பு அதிகாரிகள், இந்திய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் நல திட்ட மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட சமூகத் தலைவர்களும் 1,000 ரிங்கிட் பெறுவார்கள்.