Home நாடு நாடாளுமன்ற வளாகத்தில் கூடியவர்களை காவல் துறை விசாரிக்கும்

நாடாளுமன்ற வளாகத்தில் கூடியவர்களை காவல் துறை விசாரிக்கும்

363
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் வளாகத்தில் நடந்த #BukaPuasaParlimen பேரணியில் பங்கேற்ற அனைவரிடமிருந்தும் காவல் துறை வாக்குமூலம் பெறும்.

அவர்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும் இதுவரை பேரணியில் பங்கேற்ற 90 பேரை காவல் துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் டாங் வாங்கி காவல் துறைத் தலைவர் முகமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

பேரணிக்கு அனுமதி இல்லை என்றும், பேரணியை நடத்த அமைப்பாளர்களிடமிருந்து காவல்துறை விண்ணப்பம் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“கூடியிருந்த பங்கேற்பாளர்கள் முடா, பெஜுவாங் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆவர்,” என்று அவர் கூறினார்.