கோலாலம்பூர்: சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று, கட்சி விட்டு கட்சித் தாவும் அரசியல்வாதிகளை விசாரிக்க மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படும்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறுகையில், அரசியல் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும், கட்சி விட்டு கட்சித் தாவும் சுதந்திரம் உள்ளது, ஏனெனில் இந்த விஷயத்தில் எந்த சட்டத்தையும் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.
“எந்தவொரு தரப்பினரையும் வேறொரு கட்சிக்குச் செல்வதைத் தடைசெய்யும் சட்டம் இல்லை. இது தவறு அல்ல. ஆயினும், அவ்வாறான ஆதரவைப் பெறும்போது பணம் வழங்கியதற்கான ஆதாரத்தை எம்ஏசிசி விசாரித்து வருகிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏப்ரல் 30-ஆம் தேதி, முன்னாள் காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர், அரசியல்வாதிகள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார்.
“இது பாதுகாப்புப் படையினரின் உள்பிரச்சனைகளை உள்ளடக்கியது, எனவே காவல்துறையினர் அதைத் தீர்க்கட்டும்,” என்று அசாம் கூறினார்.