Home நாடு கைரி ஜமாலுடினிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்!- லிம் குவான் எங்

கைரி ஜமாலுடினிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்!- லிம் குவான் எங்

1010
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தடுப்பூசி நன்கொடையாளர் குறித்த கூற்று உண்மையாக இல்லை என்றால், தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்
கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சகம் பினாங்கு முன்மொழிந்த சலுகையை ஏற்றுக்கொள்வதை தடுத்தபோது, நிறுவனம் போலியானது என்று அமைச்சகம் கூறியது குறித்து லிம் விளக்கினார்.

சினோவாக் உற்பத்தியாளர்கள் நிறுவனத்துடன் எந்தவொரு பரிவர்த்தனையும் கொண்டிருக்கவில்லை என்றும், அப்படி ஒரு நிறுவனம் ( ஜிண்டாய் டெவலப்மென்ட் எண்டர்பிரைஸ் லிமிடெட்) இல்லை என்றும் கைரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கைரி நிறுவனம் ஹாங்காங் வணிக பதிவேட்டில் இல்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், இதைவிட முக்கிய பிரச்சனை உள்ளது என்று லிம் கூறினார். புத்ராஜெயா கொவிட் -19 தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது மாநில அரசுகளுக்கு இன்னும் கடினமாக்கி உள்ளது என்று அவர் கூறினார்.