Home நாடு அவசரகால சிறப்புக் குழுவின் தலைவர் மாமன்னரைச் சந்தித்தார்

அவசரகால சிறப்புக் குழுவின் தலைவர் மாமன்னரைச் சந்தித்தார்

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 அவசரகால சிறப்புக் குழுவின் தலைவர் அரிபின் சகாரியா இன்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சந்தித்துள்ளார். இது குறித்து ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுல்தான் அப்துல்லாவின் தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பின்னர் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.

அவசரகால அமலாக்கத்தை நிறுத்துதல் அல்லது நீட்டித்தல் குறித்து மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 அவசரகால சிறப்புக் குழு 2021 அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-இன் படி நிறுவப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தக் குழு தொடர்பாக அதிகம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தக் குழு இன்னும் வெளிப்படையாக இருக்குமாறு வலியுறுத்திய பல தரப்பினரின் விமர்சனங்களை இது எதிர்கொண்டுள்ளது.