Home நாடு கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,982 – சிலாங்கூரில் மட்டும் 2,907 தொற்றுகள்!

கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,982 – சிலாங்கூரில் மட்டும் 2,907 தொற்றுகள்!

1109
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  கிள்ளான் பள்ளத்தாக்கு முழுமையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நாளை முதல் வரவிருக்கும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 2) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5,586 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வருகிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 765,949 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் 2,907 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 637 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 606 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.

சரவாக் 440 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.