முகமட் ஹாசான் தேசிய முன்னணியின் துணைத் தலைவருமாவார். முகமட் ஹாசான் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் வியூகக் கட்டளை மையத்தின் (WAR ROOM) தலைவருமாவார்.
இந்தப் புதிய நியமனத்தை அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்தார்.
இந்தப் புதிய நியமனத்தின் மூலம் முகமட் ஹாசானின் செல்வாக்கும், ஆதிக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
தேசிய முன்னணியின் துணைத் தலைவர், அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் முகமட் ஹாசான் மேலும் சிறப்புடன் அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பை வகிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்ட தாஜூடின் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தார். அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லானையே அண்மையில் தாஜூடின் சாடியிருந்தார்.
இன்னொரு காணொலியில் தாஜூடின், அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியையும் தேசியக் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் விவகாரத்தில் குறை கூறியிருந்தார்.