Home நாடு இஸ்மாயில் சாப்ரி : நாட்டின் 9-வது பிரதமர்!

இஸ்மாயில் சாப்ரி : நாட்டின் 9-வது பிரதமர்!

685
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் நியமித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி பிரதமராக மான்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் பிற்பகல் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.

#TamilSchoolmychoice

சுமார் 2 மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் சுல்தான்களின் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரண்மனையிலிருந்து வெளியேறின.

நாட்டின் 9-வது பிரதமர் குறித்த முடிவை விவாதிக்க மலாய் ஆட்சியாளர்கள் இன்று கோலாலம்பூரில் மாமன்னரின் தலைமையில் ஒன்று கூடினர்.

பெர்லிஸ், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சுல்தான்கள் இன்றைய ஆட்சியாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.