Home நாடு மலாய் ஆட்சியாளர் கூட்டம் முடிந்தது – ஜோகூர் சுல்தான் கலந்து கொள்ளவில்லை

மலாய் ஆட்சியாளர் கூட்டம் முடிந்தது – ஜோகூர் சுல்தான் கலந்து கொள்ளவில்லை

681
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டம் பிற்பகல் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.

சுமார் 2 மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் சுல்தான்களின் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரண்மனையிலிருந்து வெளியேறும் காட்சிகளை ஆஸ்ட்ரோ அவான் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பியது.

நாட்டின் 9-வது பிரதமர் குறித்த முடிவை விவாதிக்க மலாய் ஆட்சியாளர்கள் இன்று கோலாலம்பூரில் மாமன்னரின் தலைமையில் ஒன்று கூடினர்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்தில் ஜோகூர் சுல்தான் கலந்து கொள்ளவில்லை.

அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இனி வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.