Home நாடு மலாக்கா : இறுதி நிலவரம் – தேசிய முன்னணி 21 – பக்காத்தான் 5 –...

மலாக்கா : இறுதி நிலவரம் – தேசிய முன்னணி 21 – பக்காத்தான் 5 – பெரிக்காத்தான் 2

591
0
SHARE
Ad

மலாக்கா : 28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி லெண்டு தொகுதியில் மீண்டும் 3,104 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல்லா மஹாடி 1,382 வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் ஹாரப்பானின் முகமட் அஸ்ரி இப்ராகிம் 1,155 வாக்குகளைப் பெற்றார்.

பக்காத்தான் ஹாராப்பான் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஜசெக வெற்றி பெற்றிருக்கிறது. பக்காத்தானின் முன்னாள் மந்திரி பெசார் அட்லி சஹாரி அமானா சார்பில் ஒரே ஒரு தொகுதியில் – புக்கிட் கட்டில் தொகுதியில் – வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால் 11 தொகுதிகளில் போட்டியிட்ட பிகேஆர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுமோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது.