புக்கிட் மெர்தாஜாம் : பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்றத்திற்கான பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் லீ கை லூன், இன்று தன் தொகுதியில் உள்ள பிகேஆர் சேவை மையத்தில் இருந்தபோது மயக்கமுற்று விழுந்தார்.
களைப்பினால் அவர் மயக்கமடைந்ததாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரின் பிகேஆர் சகாக்கள் தெரிவித்தனர்.
அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் அவர் தரையில் முகம் குப்புறப் படுத்த நிலையில் அவர் காணப்பட்டார்.
பெர்னாமாவின் செய்தியின்படி, லீ தனது சேவை மையத்திற்கு காலை 11 மணியளவில் வந்தபோது சரிந்து விழுந்ததாக அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், லீயை எதிர்த்துப் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் டான் ஹம் வெய், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
லீ தொடர்ந்து மூன்றாவது முறையாக மச்சாங் புபுக்கை பிகேஆர் கட்சி சார்பாக தற்காக்கிறார். கெராக்கான் – பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டான் ஹம் வெய்யை அவர் நேரடிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.