Home நாடு பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மொகிதின் யாசின்

பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மொகிதின் யாசின்

352
0
SHARE
Ad

ஷா ஆலாம் : துன் மகாதீருடன் இணைந்து பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்து தற்போது அதன் தலைவராகவும் செயல்படும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீண்டும் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெர்சாத்து கட்சியின் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறும்போது தனது தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதில்லை என இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற அந்தக் கட்சியின் ஆண்டுப் பொதுப் பேரவையில் மொகிதின் யாசின் அறிவித்தார்.

பெர்சாத்து தலைமைத்துவத்தை அடுத்த கட்டத் தலைவர்களிடம் விட்டுக் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசினுக்கு அடுத்த அந்தப் பதவிக்குப் போட்டியிட கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹாம்சா சைனுடின் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாம்சா தற்போது பெரிக்காத்தான் கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

கட்சியின் துணைத் தலைவரான பேராக் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசார் அசுமுவும் பெர்சாத்து கட்சியின் தலைமைத்துவத்திற்குப் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன.