Home உலகம் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது – 8 குழந்தைகள் உள்ளிட்ட 367 பயணிகள் – 12...

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது – 8 குழந்தைகள் உள்ளிட்ட 367 பயணிகள் – 12 பணியாளர்கள் உயிர்பிழைத்த அதிசயம்

451
0
SHARE
Ad

தோக்கியோ : பிறந்திருக்கும் புத்தாண்டு நிலநடுக்கத்தைத் தந்து ஜப்பானுக்கு சோதனையான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. இரண்டாவது சோதனையாக இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (பிளைட் 516) ஒன்று ஹானிடா விமான நிலையத்தில் மற்றொரு கரையோரக் காவல் விமானத்துடன் மோதி தீப்பிடித்தது.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக விமானத்தில் இருந்த 367 பயணிகளும் 12 விமானப் பணியாளர்களும் காப்பாற்றப்பட்டனர். பயணிகளில் 8 குழந்தைகளும் இருந்தனர். விமானம் முற்றாக தீப்பிடித்து எரிந்தது. சில பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் காயங்களின் நிலைமை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும் அந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதிய கரையோரக் காவல் விமானத்தில் இருந்த 6 பேரில் ஐவர் உயிரிழந்தனர். விமானத்தின் விமானி கடுமையான காயங்களுக்கு இலக்காகியிருக்கிறார். ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அங்கிருந்த கரையோரக் காவல் விமானத்துடன் மோதியதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

காவல் விமானம் நேற்று முதல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.