பாங்காக் – தாய்லாந்து அரசியலில் எதிர்பாராத திருப்பமாக 37 வயதான பாயிதோங்தார்ன் ஷினாவாத்ரா மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
37 வயதான அவர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு தேர்தலில் அவரது பியூ தாய் கட்சி இரண்டாவது இடத்தைப் பெற்றது. ஆனால் இராணுவத்தின் எதிர்ப்பால் அவரால் பிரதமராக முடியவில்லை.
முந்தைய பிரதமரும் பிரபலமான அரசியல்வாதியுமான தாக்சின் ஷினாவாத்ராவின் மகளான அவர், தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரி இங்க்லக் ஷினவாத்ரா ஆகியோரின் பாதையில், அந்தக் குடும்பத்தில் இருந்து பிரதமராக முடியுமா என்பது உத்தேசமாக நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தெரியவரும்.
பிரதமர் ஸ்ரேத்தா தாவிஸின் ஒரு நீதிமன்ற உத்தரவால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்டோங்க்தார்ன் அடுத்த பிரதமராகும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
பாயிதோங்தார்ன் வெற்றி பெற்றால், வயது குறைந்த இளம் தாய்லாந்து பிரதமராகவும், அந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணியாகவும் திகழ்வார்.
அவரின் தந்தை ஷினவாத்ரா 2001-இல் பிரதமரானார். அவரின் ஆட்சி 2006-ஆம் ஆண்டிலும் பாயிதோங்தார்ன்னின் அத்தை இங்க்லக்கின் ஆட்சி 2014 ஆம் ஆண்டிலும் இராணுவத்தால் கலைக்கப்பட்டன.
தக்சின், நீண்டகாலமாக அயல்நாடுகளில் அரசியல் அடைக்கலம் கண்டிருந்த பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு திரும்பினார்.
66 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தாய்லாந்திற்கு புதிய பிரதமர் யார் என்பது அநேகமாக நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தெரியவரும்.