புதுடெல்லி: பிரபல இணைய ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து விடுதலையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் விடுதலையாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் நடத்தி வந்த சவுக்கு மீடியா இணை ஊடகம் நிறுத்தப்பட்டது.
தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைவைக்கப்பட சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்தது.
விசாரணைகளுக்குப் பின்னர் சவுக்கு சங்கரை 2-வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சவுக்கு மீடியா நிறுத்தப்பட்டபோது, விடுக்கப்பட்ட அறிக்கை: