Home நாடு பிகேஆர் கட்சியின் பேராளர்களில் இனி 30 விழுக்காட்டினர் பெண்கள்!

பிகேஆர் கட்சியின் பேராளர்களில் இனி 30 விழுக்காட்டினர் பெண்கள்!

94
0
SHARE
Ad

ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (16 டிசம்பர்) நடைபெற்ற பிகேஆர் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் விதத்திலான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

முதல் மிகப் பெரிய மாற்றமாக இனி, பிகேஆர் பேராளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும். 2010-ஆம் ஆண்டு முதல் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் வாக்களித்து கட்சியின் முக்கியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்தது. புதிய சட்டத் திருத்த மாற்றங்களினால் அந்த நடைமுறை மாற்றப்பட்டு, இனி 222 தொகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேராளர்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பர்.

அந்தந்தத் தொகுதிகளின் வாக்காளர்களின் இன விழுக்காட்டிற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் வகையில் தொகுதிகள் பேராளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு பிகேஆர் கட்சிக்குத் தேர்தல் ஆண்டாகும். ஜனநாயக முறைப்படி விரைவாக பிகேஆர் கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, பழையவர்களும் புதியவர்களும் இணைந்த புதிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்திருந்தார்.