Home இந்தியா சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு

84
0
SHARE
Ad

சென்னை: ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் தமிழ் நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ‘அயலகத் தமிழர் தினம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் வருகை தந்தார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக, சென்னையில் நடைபெற்ற 48-வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கும் யுனேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வருகை தந்தார். சென்னை புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் மலேசியப் பிரதமர் குறித்து இரா.முத்தரசன் எழுதிய நூலான ‘அன்வார் இப்ராகிம்: சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூல் இடம் பெற்றிருக்கும் ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ பதிப்பகத்தின் விற்பனைக் கூடத்துக்கும் யுனேஸ்வரன் வருகை தந்தார்.

யுனேஸ்வரனுடன் யாவரும் பதிப்பகத்தின் உரிமையாளர் ஜீவகரிகாலன் (இடது கோடி) நூலாசிரியர் இரா.முத்தரசன், அவரின் துணைவியார் விக்னேஸ்வரி

இரா.முத்தரசன் எழுதிய அன்வார் இப்ராகிம் அரசியல் போராட்டங்கள் குறித்த இந்த நூல் தமிழ் நாட்டு வாசகர்களும் அறிந்து கொள்ளும் முறையில், நமது பிரதமரின் நீண்ட நெடிய அரசியல் போராட்டங்கள் குறித்து அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டு, தமிழ் நாட்டிலேயே பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டிருப்பது குறித்து யுனேஸ்வரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நமது பிரதமரின் அரசியல் பணிகளும், போராட்டங்களும், நாடு கடந்து அனைத்து அளவிலும், குறிப்பாக இந்தியாவின் தமிழ் வாசகர்கள் மத்தியிலும் பரவச் செய்யும் வகையில், இந்த நூல் தமிழ் நாட்டில் பதிப்பிக்கப்படுவதற்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாகவும் பிகேஆர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான யுனேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.